கூந்தல் நீளமாக வளர ஸ்பெசல் எண்ணெய்

Sekar Chandra
இன்றைய அழகு குறிப்பு தகவலில், கூந்தல் நீளமாக வளர, தேய்க்கப்படும் மூலிகை எண்ணெய் செய்வதன் முறைகளை பார்க்கலாம். மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த எண்ணெய்யை தொடர்ந்து உபயோகித்து வந்தால், நீளமான கூந்தலை பெறலாம். 


தேவையான பொருட்கள்:


1.தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர் 


2. நெல்லிக்காய் காய்ந்த பொடி - 10 கிராம்


3. தான்றிக்காய் - 10 கிராம் 


4. வேப்பிலை பொடி - 10 கிராம் 


5. கறிவேப்பிலை பொடி - 10 கிராம் 


6. மருதாணி பொடி - 10 கிராம் 


7. கரிசலாங்கண்ணி பொடி - 10 கிராம் 


8. வெட்டி வேர் - 10 கிராம் 


9. ரோஜா இதழ் - 10 கிராம் 


10. சந்தனப் பொடி - 10 கிராம் 


இந்த பொடிகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, தேங்காய் எண்ணையுடன் கலந்து நன்கு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய எண்ணெய்யை, சூரிய ஒளியில் ஐந்து நாட்கள் வைத்த பின், வடிகட்ட வேண்டும். வடிகட்டிய இந்த எண்ணெய்யை தினமும் தலை முடியில் தேய்த்து வந்தால், பேன், பொடுகு நீங்குவதோடு அடர்த்தியாகவும், நீளமாகவும் முடியும் வளரும்.


Find Out More:

Related Articles: