முடி கொட்டுதலை தடுக்கும் டிப்ஸ்....

frame முடி கொட்டுதலை தடுக்கும் டிப்ஸ்....

Sekar Tamil
முடி கொட்டுதலை தடுக்கும், சில இயற்கையான டிப்ஸை நாம் இன்றைய அழகு குறிப்பு தகவலில் பார்க்கலாம். 


கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து, அதனுடன் பாசி பருப்பு மாவை கலந்து, தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நின்று விடும். 



முடி நன்கு வளர, கற்றாழை சாற்றில், தேங்காய் எண்ணெய் கலந்து முடியில் தேய்த்து வந்தால், முடி நன்கு அடர்த்தியாக வளரும். 



சின்ன வெங்காயத்தின் சாறை எடுத்து, தலையில் தேய்த்து வந்தால் முடி உதிராது. 




முட்டையின் வெள்ளை கருவை, தலையில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து, சீயக்காய் பொடி தேய்த்து குளித்து வந்தால், முடி உதிர்வது நின்றுவிடும்.



முடக்கத்தான் கீரையை, அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி கருகருவென வளரும். வாரம் ஒருமுறை, இதை பின்பற்றி வந்தால் நரை முடி வராது. 



Find Out More:

Related Articles: