இன்றைய காலத்தில், நாம் அனைவருமே தலை முடி பிரச்னையால் அவதிப்படுகின்றோம். சிறு வயதிலியே, வழுக்கை, இளநரை, முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
இதை சரி செய்ய, நம்மிடம் பாரம்பரிய குறிப்புகள் உள்ளன. அவற்றை இப்போது நாம் பார்க்கலாம்.
கால் கப் வெந்தயத்தை, இரவு படுக்கும் முன்பு ஊறவைத்துவிட்டு, அதை காலையில் பேஸ்ட் பதத்தில் அரைத்து, அதனுடன் செம்பருத்தி பூவையும் சேர்த்து அரைத்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுதல் நிற்கும், பொடுகு தொல்லையும் நீங்கும்.
செம்பருத்தி இலைகளுடன், மருதாணி இலையையும் சேர்த்து அரைத்து, தலையில் தடவி, அலசி வந்தால் முடி அடர்த்தியாக மாறும்.
15 செம்பருத்தி இலை, 5 செம்பருத்தி பூ, இவற்றை தண்ணீரில் 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் அந்த தண்ணீரை தலைக்கு தடவி குளித்து வந்தால், முடி ஆரோக்கியமாக இருக்கும்.
முட்டையின் வெள்ளை கருவை தலைக்கு தாயத்து வந்தால், பொடுகு வராது.