சரும அழகை மேம்படுத்துவதில், பாதாமிற்கு முக்கிய பங்கு உண்டு. இதிலுள்ள சத்துக்கள் சருமத்தை மின்ன செய்கிறது. இதை எப்படி உபோயோகப்படுத்த வேண்டும் என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.
பாதாம் பொடியுடன், தேன் கலந்து முகத்தில் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
பாதாம் என்ணெய் 1 ஸ்பூன் எடுத்து அதில் காய்ச்சாத பால் 2 ஸ்பூன் விட்டு, நன்கு கலந்து முகத்தில் தடவினால், முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறும். சருமமும் பளிச்சென்று இருக்கும்.
பாதம் எண்ணெய் உடன் விட்டமின் இ எண்ணெய்யின் சிறுதுளிகள் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்தால், முகம் பளபளப்பாகுவதோடு சுருக்கங்களும் வராது.