தலை முடியின் அடர்த்தியை கூட்டும் சீகைக்காய் ஷாம்பூ

frame தலை முடியின் அடர்த்தியை கூட்டும் சீகைக்காய் ஷாம்பூ

Sekar Tamil
கூந்தல் அடர்த்தியாக இருக்க, நாம் சீகைக்காய் ஷாம்பூ பயன்படுத்தலாம். இதன் செய்முறையை இப்போது நாம் பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் :


சீகைக்காய் பொடி- 200 கிராம் 
நெல்லிக்காய் பொடி - 100 கிராம்
பூந்திக் கொட்டை - 100 கி(பொடித்தது) 
வெந்தயப் பொடி - 100 கி 
கருவேப்பிலை - கையளவு 
துளசி இலை - கையளவு. 


மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த பொருட்களை இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும். பிறகு அதை மிக்சியில், தண்ணீர் சேர்க்காமல் நன்கு பொடியாக்கி கொள்ளுங்கள். 


பின்பு, இடித்த இந்த பொடியை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தலைக்கு குளிக்கும் போது, ஷாம்பூவிற்கு பதில் இந்த பொடியை நீங்கள், தண்ணீர் சேர்த்து தலையில் தடவி கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து தலை முடியை அலச வேண்டும். இதை வாரம் ஒருமுறை வைத்து, பின்பற்றி வந்தால் முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.


Find Out More:

Related Articles:

Unable to Load More