மழைக்காடு, கடற்கரை... சூப்பர் ஓட்டல் ரெடியாகுது... ரெடியாகுது...

frame மழைக்காடு, கடற்கரை... சூப்பர் ஓட்டல் ரெடியாகுது... ரெடியாகுது...

Sekar Tamil
துபாய்:
மழைக்காடு, கடற்கரை, மரங்கள், நீரை வாரியடிக்கும் நீச்சல்குளம் என்று மனதை கவரும் வண்ணம் துபாயில் அதி நவீன ஓட்டல் கட்டப்படுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.


எண்ணெய் வளம் மட்டுமே நிறைந்த வளைகுடா நாடுகளில் ஒன்று துபாய். இது பாலைவன பிரதேசமாகும். மற்ற வளங்கள் என்று எதுவும் இங்கு இல்லை. எனவே, சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் கவரும் வகையில் அதிநவீன ஓட்டல் கட்டப்பட்டு வருகிறதாம்.


எப்படி தெரியுங்களா? மழைக்காடுகள், கடற்கரை, மரங்கள், நீரை வாரியடிக்கும் நீச்சல் குளம், மூடுபனி போன்றவை செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகின்றன. ஓட்டலுடன், குடியிருப்புகளும் அதில் கட்டப்பட உள்ளதாம். இதை கட்ட ஆகும் செலவு பட்ஜெட் எவ்வளவு தெரியுங்களா? ஜஸ்ட் ரூ. 2300 கோடியாம். என்ன தலையை சுற்றுகிறதா? 


இந்த ஓட்டல் 5 நட்சத்திர அந்தஸ்து கொண்டதாக அமைகிறது. 75 ஆயிரம் சதுர அடி கொண்ட ஓட்டலை உலக புகழ்பெற்ற ஹில்டன் பிராண்டு குயுரியோ நிறுவனம் நடத்த உள்ளது. அதில் அமைக்கப்படும் மழைக்காடு பார்வையாளர்களை நிச்சயம் கவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எல்லாம் இந்த ஓட்டலை எப்போ திறக்கிறாங்க என்று கேட்கிறீர்களா? அதுக்கு இன்னும் 2 வருடம் காத்திருக்கணும்ங்க... வரும் 2018-ம் ஆண்டு இந்த ஓட்டலை திறக்க முடிவு செய்திருக்காங்களாம்.



Find Out More:

Related Articles:

Unable to Load More