ரிலையன்சை சமாளிக்க பிஎஸ்என்எல்- வோடபோன் கைகுலுக்கல்

frame ரிலையன்சை சமாளிக்க பிஎஸ்என்எல்- வோடபோன் கைகுலுக்கல்

Sekar Tamil
மும்பை:
ஒப்பந்தம்... ஒப்பந்தம்... ரிலையன்சின் போட்டியை சமாளிக்க  பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் கைகுலுக்குகின்றன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஆகிய 2 நிறுவனமும் நாடு முழுவதும் ஒருவருக்கொருவர் இருக்கும் சொத்துக்கள் மற்றும் நெட்வொர்க் அனுமதி போன்றவற்றை பயன்படுத்த ஒரு 2ஜி இன்ட்ரா-சர்க்கிள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட போறாங்களாம். 


இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் நாடு முழுவதும் 2,50,000 டவர்கள் உள்ளன. கையெழுத்தாகும் இந்த ஒப்பந்தம் மூலம் நகர்ப்புற பகுதிகளில் பிஎஸ்என்எல் நுழையவும், கிராமப்புற பகுதிகளில் வோடபோன் நுழையவும் வழி ஏற்பட்டுள்ளது.


 குரல், டேட்டா பயன்பாடு என எதுவாக இருப்பினும் எந்நேரமும் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையான, ஒரு உயர்ந்த பிணைய அனுபவத்தை வழங்க இருப்பதாக வோடபோன் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.


இந்த கைகுலுக்கல் ரிலையன்சுடன் போட்டி போடுவதற்குதான் என்று சொல்றாங்க... சொல்றாங்க...


Find Out More:

Related Articles:

Unable to Load More