ரொம்ப..ப..ப.. பெரிசு... பெரிசு... அதானி குழுமம் அதிரடி...

frame ரொம்ப..ப..ப.. பெரிசு... பெரிசு... அதானி குழுமம் அதிரடி...

Sekar Tamil
சென்னை:
ரொம்ப...ப...ப... பெரிசு... பெரிசு... என்று தமிழகத்தில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தை அதானி குழுமம் உருவாக்கி உள்ளது.


தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் இந்த சூரிய மின்சக்தி நிலையம் உருவாகி உள்ளது. இங்குள்ள கமுதி பகுதியில் 648 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையம் துவக்கப்பட்டுள்ளது.


5000 ஏக்கர் பரப்பளவில் ரூ.4550 கோடி முதலீட்டில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையத்தில் ஒரே சமயத்தில் 8500 பேர் பணியாற்றுகின்றனர்.


இந்த சூரிய ஒளி மின்சக்தி நிலையத்தில் இருந்து மாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபோன்ற மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தை தமிழக அரசு அமைத்தால் மக்களுக்கு இன்னும் குறைந்த செலவில் மின்சாரம் கிடைக்கும் அல்லவா?


Find Out More:

Related Articles:

Unable to Load More