தூக்கமின்மையை போக்கும் சில வழிகள்

Sekar Chandra
மன உளைச்சல் காரணமாக தூக்கமின்மை ஏற்படும். தோல்நோய்கள், அஜீரண கோளாறு, இதய படபடப்பு, மலச்சிக்கல், சோர்வு போன்றவை தூக்கமின்மையால் ஏற்படுகிறது. முறையற்ற உணவுமுறை, இரவு நேரத்தில் அதிகநேரம் கண்விழித்து பணி செய்வது போன்ற காரணங்களாலும் தூக்கமின்மை ஏற்படுகிறது. தூக்கமின்மையை போக்குவதற்கான சில வழிமுறைகள்  

1) தேனீர்
ஜாதிக்காயை எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதனுடன், ஊறவைத்து வைத்திருக்கும் நெல்லி வற்றலை தண்ணீருடன் சேர்க்கவும். மல்லிகை பூ, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி காய்ச்சிய பால் சேர்க்கவும். இந்த தேனீரை தூங்கபோகும் முன்பு குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.


2) செம்பருத்தி 
செம்பருத்தி பூவை தேங்காய் எண்ணெய்யில் இட்டு காய்ச்சவும். பின்னர், உச்சந்தலையில் ஓரிரு துளிகள் விட்டு மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும்.


3) வாழைப்பழம் 
பூவன் வாழைப்பழத்தை மசித்து 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். அரை ஸ்பூன் சீரகப்பொடி, சிறிது தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். தூங்க செல்லும் முன்பு  இதை சாப்பிட்டு வர நல்ல தூக்கம் வரும். 
      



Find Out More:

Related Articles: