வயிற்றில் குடல் புண்கள் இருந்தால், வலியால் நாம் மிகுதியாக அவதிப்படுவோம். குடல்புண்கள் முறையான உணவு பழக்கங்கள் இல்லாவிட்டால் வரும். இதை குணப்படுத்தும் மருத்துவ குறிப்பினை நாம் இன்றைய ஆரோக்கிய தகவலில் பார்க்கலாம்.
உணவு உண்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, இரண்டு தேக்கரண்டி தேன் அருந்த வேண்டும். இதை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால், குடல் புண்கள் ஆறும், நல்ல மாற்றம் தெரியும்.
ஒரு டீஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீஸ்பூன் தூள் எடுத்து அதனுடன் தேன் கலந்து உட்கொள்ளவேண்டும். செரிமான கோளாறுகளுக்கு இது நல்ல மருந்தாகும்.
அகத்திக்கீரையை, காம்பு எடுத்து ஆய்ந்த பின் வேக விட்டு, அந்த சாற்றுடன் தேன் கலந்து உண்டுவந்தால், குடல்புண்கள் ஆறும். வயிற்று எரிச்சல் நிற்கும்.
ஆலமரத்திலிருந்து ஒரு டீஸ்பூன் பால் எடுத்து, அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும், வயிற்றிலுள்ள புண்களும் குணமாகும்.