ஜலதோஷம் வந்தால் நாம் அனைவருமே அவஸ்தை படுவோம், அதை சரி செய்ய குறைந்தது 4 அல்லது 5 நாட்களாவது ஆகிவிடும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில டிப்ஸினை பின்பற்றினால், விரைவில் ஜலதோஷத்தை குணப்படுத்திவிடலாம்.
1. ஜலதோஷம் உள்ளவர்கள், இரவு படுக்கும் முன்பு இரண்டு அல்லது மூன்று சாம்பார் வெங்காயத்தை மென்று தின்னுவிட்டு, சுடுதண்ணீர் பருகி படுத்தால்,கலையிலியே ஜலதோஷம் குணமடையும்.
2. கசகசாவை பாலில் கலந்து, குடித்து வந்தால் ஜலதோஷம் நீங்கும்.
3. சுக்கு பால் குடித்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.
4. பாலில் சிறுதளவு மஞ்சள் தூள் சேர்த்து, இரவு படுக்கும் முன்பு குடித்து வந்தால், மார்பில் தங்கியிருக்கும் சளி நீங்கும்.
5. தேங்காய் எண்ணையை சூடாக்கி, அதனுடன் கற்பூரம் சேர்த்து, கரைத்து இளம்சூட்டில் கை, கால்கள், நெஞ்சு பகுதிகளில் தடவி வந்தால் சளி குணமடையும்.