உடல் எடை அதிகமாக இருந்தால், பல்வேறு நோய்கள் தாக்க கூடும். அதனால் தான் மருத்துவர்கள் நம்மை உயரத்திற்கு ஏற்ற எடை தான் சரியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள்.
இப்போது உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த உணவுகளை பற்றி நாம் பார்க்கலாம்.
பட்டை :
உடல் எடையை குறைப்பதில் பட்டைக்கு முக்கிய பங்கு உண்டு. தினமும் 1 தேக்கரண்டி பட்டை பொடியை, வெந்நீரில் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறையும்.
ராகி
ராகியில், நார்சத்து அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. தினமும் இரவு ராகி தோசை, ராகி களி ஆகியவற்றை உண்டு வந்தால் உடல் எடை சரசரவென குறையும்.
கொள்ளு
உடலில் இருக்கும் உள சதையை கொள்ளு குறைக்க செய்யும். அதனால் இதை நாம் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
கடுகு எண்ணெய்
சமையலில் கடுகு எண்ணெய் பயன்படுத்தி வந்தால், உடல் எடை கூடுவதை தடுக்கலாம்.
பாசி பருப்பு
ப்ரோட்டீன் அதிகம் நிறைந்த பாசி பருப்பை, நம் உணவில் சேர்த்து கொள்ளலாம். இது கொலஸ்ட்ராலை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.