ஜிகா... ஜிகா... நடுநடுங்கி போய் கிடக்குது சிங்கப்பூர்...

Sekar Tamil
சிங்கப்பூர்:
ஜிகா...வால் சிங்கப்பூரே நடுநடுங்கி போய் உள்ளது. காரணம். 26 பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்களாம். 


தென்அமெரிக்கா நாடான பிரேசிலை முதன்முதலாக ஜிகா வைரஸ் தாக்கியது. இங்கு ஆரம்பித்த இந்த வைரஸ்தான் தற்போது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இந்த ஜிகா வைரஸால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குழந்தைகள் குறைபாடுள்ளதாக இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் ஜிகா வைரஸால் உலக நாடுகள் அச்சத்திற்கு உள்ளானது. 


பிரேசிலில் இருந்து தென்அமெரிக்கா முழுவதும் இந்த வைரஸ் பரவி பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. தற்போது அங்கு சற்றே நிலைமை சீராகி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் 40-க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட பெரும் பரபரப்பு உருவானது.


இந்நிலையில் மேலும் 26 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘‘இந்த வைரஸ் ஆசியப் பகுதியில் உள்ளதுதான்.  தென்அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் மூலம் இந்த வைரஸ் சிங்கப்பூரில் பரவில்லை’’ என்று அறிவித்துள்ளது.


தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 215 ஐ தாண்டியுள்ளதால் சிங்கப்பூர் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.



Find Out More:

Related Articles: