லில்லி:
உலகின் முதல் முகமாற்று ஆபரேசன் செய்துகொண்ட பிரான்ஸ் நாட்டு பெண் மரணம் அடைந்து விட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரான்சைச் சேர்ந்த டாக்டர் பெர்னார்ட் தேவாசெல்லே மற்றும் அவரது குழுவினர் கடந்த 2005-ம் ஆண்டில் நவம்பர் 27-ம் தேதி உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி காட்டினர்.
நாய் கடித்ததால் விகாரமாக முகம் மாறி போன இசபெல்லி டினோரி என்ற பெண்ணுக்கு இந்த ஆபரேசன் நடந்தது. மூளைச்சாவு அடைந்த ஒருவரின் முக பாகங்கள் இவருக்கு பொருத்தப்பட்டன.
பின்னர் இவர் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். ஆனால் பக்க விளைவுகள் அதிகரித்து கடந்த ஆண்டு இவர் ரொம்பவே சீரியஸ் நிலைக்கு உள்ளானார்.
நீண்டகாலம் இவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இவர் கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்துள்ளார். இந்த தகவலை இப்போதுதான் ஏமியன்சில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இசபெல்லியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் இந்த தகவல் இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்ததாம்.