முன்பெல்லாம் சர்க்கரை நோய் 45 வயது தாண்டியவர்களுக்கு, தான் வரும். ஆனால் இப்போது உணவு பழக்கங்களின் தாக்கம் அதிகரித்ததால், 30 வயது தாண்டுவதற்கு முன்பே சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. சர்க்கரை நோய் ஒரு ஆபத்தான வியாதி. இது உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வரும்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.
வெங்காயம்
வெங்காயம் இன்சுலினை தூண்ட செய்யும். அதனால் இதை பச்சையாக சாப்பிட வேண்டும்.
பாகற்காய்
பாகற்காய், மனிதனின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவி செய்கிறது. அதனால் இதை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
வெந்தயம்
வெந்தயத்தில், நார்சத்து அதிகம் உள்ளதால் இது சர்க்கரை நோய்க்கு மருந்தாக கருதப்படுகிறது.
சாப்பிட வேண்டிய காய்கறிகள் :
கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், வெண்பூசணி, வெள்ளை முள்ளங்கி, புடலங்காய், பலாக்காய்,காலிபிளவர், முட்டை கோஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சிவப்பு முள்ளங்கி, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாப்பிடலாம்.
சாப்பிட வேண்டிய பழங்கள் :
ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, பேரீக்காய், பப்பாளி, வெள்ளரிப் பழம், கொய்யாப் பழம் ஆகியவை சாப்பிடலாம்.
குறிப்பு : சர்க்கரை நோயாளிகள், கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும்.