நமது அன்றாட சமையலில், வாசனை மற்றும் ருசிக்காக, சீரகத்தை பயன்படுத்துவோம். ஆனால் இதில் உள்ள நற்குணங்கள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இது பார்ப்பதற்கு அழுக்காய், அவ்வளவு வசீகரமாக இருக்காது. ஆனால் இதில் பல அற்புதமான விஷயங்கள் அடங்கியுள்ளன.
வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை, சீரகம் எப்படி சரி செய்கிறது என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.
1. சீரக பொடியை, வெண்ணெயுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், குடல் புண்கள் ஆறும்.
2. கொதிக்கும் தண்ணீரில் சீரகத்தை போட்டு, நன்கு அறிய பின்பு, அந்த நீரை வடிகட்டி, குடித்தால் வயிற்றில் தங்கியிருக்கும் கழிவுகள் நீங்கும்.
3. வெயில் காலங்களில், உடல் உஷ்ணம் ஏற்படும் போது, ஜீரக தண்ணீர் குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.