மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருட்களில் பூண்டு மிகவும் முக்கியமானது. பூண்டை நாம் உணவில் சேர்த்து கொள்வதால், ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.
1. வாயுத்தொல்லைகளை நீக்குவதில், பூண்டு மிகவும் சிறந்தது. தினசரி ஒரு பூண்டை, தீயில் சுட்டு, மென்று வந்தால் வாயுத்தொல்லை முற்றிலும் நீங்கும்.
2. ரத்தத்தை சுத்தப்படுத்தி, புற்று நோய் மாதிரியான கொடிய நோய்களை, நம்மிடம் அண்ட விடாமல் தடுக்க செய்கிறது.
3. இதயத்தில் சேரும் கொழுப்புகளை, பூண்டு கரைக்க செய்கிறது.
4. முகப்பரு இருக்கும் இடத்தில பூண்டு சாறை தடவி வந்தால் பருக்கள் உடனே மறைந்துவிடும்.
5. நல்லெண்ணையில் 10 பல் பூண்டை சேர்த்து, சுண்ட காய்ச்சி ஆற வாய்த்த பின்பு, அந்த எண்ணையை சிறிதளவு காதுகளில் விட்டால், காது வலி குணமடையும்.