அழுகிய திமிங்கலம்... வெடித்து சிதறியது எதனால்.. எதனால்..?

Sekar Chandra
சென்னை:
நம் பக்கத்தில் டப் என்று சின்ன வெடி வெடித்தாலே அலறி விடுவோம். சாலையில் சென்றுக்கொண்டிருந்த ஒரு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட திமிங்கிலம் வெடித்தால்... மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும்... அது நடந்தது ஏன்... என்பதை தெரிந்து கொள்வோமா?


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாடி தைவானிஸ் நகர கடற்கரையோரம் இறந்து ஒதுங்கிய ஒரு திமிங்கலத்தை கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி சாலைக்கு கொண்டு சென்றாங்க. அப்போதுதான் அதிர்ச்சியோ அதிர்ச்சி ஏற்பட்டது. பெரிய குண்டு வெடித்த சத்தம் போல் கேட்ட வண்டியை நிறுத்தி பார்த்தபோது அந்த சுறா வெடித்து கிடந்தது. ஏன்.


இதற்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதைதான். இறந்த அந்த திமிங்கலத்தின் உடல் அழுக ஆரம்பித்து  இருக்கும். இதனால் உற்பத்தியான வாயுக்கள் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த அந்த அழுத்தம் காரணமாகவே வெடித்துள்ளது என்று. உண்மைதான் இறந்தால் மனித உடலும் இந்த கதிதான் ஏற்படும். ஒரு வாரத்தில் உடல் ஊதி வயிறு வெடித்து விடும் காரணம். உடலில் ஏற்படும் வாயுக்களின் அழுத்தம்தான். அறிந்து கொண்டோமா ஒன்றை...



Find Out More:

Related Articles: