சென்னை:
அன்னைக்கு நம்ம ஊருல பிறந்த நாள்ன்னா கொஞ்சம் மிட்டாய் வாங்கி தெரிஞ்சவங்களுக்கு கொடுத்துட்டு ஆசீர்வாதத்தோடு அவங்க தர்ற பணத்தையும் வாங்கிக்குவோம்...
இப்ப ஹாப்பி பர்த்டே பாடறாங்க... கேக் வெட்டி கொண்டாடறாங்க. தலைக்கு மேல டப்புன்னு வெடிச்சு ஸ்நோவை பறக்க விடறாங்க. இதெல்லாம் எங்கிருந்து வந்துச்சு. எல்லாம் அமெரிக்காவின் கலாச்சாரம்தான். இதுல ஹேப்பி பர்த்டேன்னு பாடறோமே அந்த பாட்டை இயற்றியது அமெரிக்காவை சேர்ந்த சகோதரிகள்.
அவங்க பேரு பெட்டிஹீல், மில்ட் ரெட். எந்த வருசம்னு தெரியுங்களா? தெரிஞ்சுக்கோங்க... 1893ம் வருசம் இந்த பாட்டை இயற்றி இருக்காங்க. இப்ப நம்ம மக்கள் பிறந்தநாளைக்கு இந்த பாடலைதான் பாடுறாங்க... என்னமோ... இவங்களே கண்டுபிடிச்ச மாதிரி... அறிந்து கொண்டதில் இது நான்கு.