சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகு பொதுமக்கள் மீட்டு சிகிச்சை; ஆஸ்திரேலியாவில் பரபரப்பு

Sekar Chandra
சிட்னி:
சிறுவனை ஒரு கழுகு தூக்கி செல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடன் அருகில் நின்ற பொதுமக்கள் கழுகு மீது தாக்குதல் நடத்தி அந்த சிறுவனை காப்பாற்றி உள்ளனர்.


ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பரிங் பாலைவனப் பூங்காவில் வன விலங்குகள் கண்காட்சி நடந்தது. அதை பார்க்க ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது பயங்கர வேகத்தில் பறந்து வந்த ஒரு கழுகு அங்கிருந்த ஒரு சிறுவனை தூக்கி செல்ல முயன்றது.


ஆனால் அதனால் சிறுவனை தூக்க முடியவில்லை. இதில் அந்த சிறுவனுக்கு ரத்தகாயம் ஏற்பட்டது. உடன் அருகில் இருந்த பொதுமக்கள் அந்த கழுகு மீது தாக்குதல் நடத்தி சிறுவனை மீட்டு சிகிச்சை அளித்தனர். சிறுவனை ஏதோ சிறிய விலங்கு என்று நினைத்து வானத்தில் வட்டமடித்த கழுகு வேகமாக வந்து தூக்க பார்த்துள்ளது என்று தெரிவிக்கின்றனர்.



Find Out More:

Related Articles: