காலம் கலிகாலம்... 17 மணந்த 71... அமெரிக்காவில் இந்த கூத்து

Sekar Chandra
நியூயார்க்:
டும்...டும்...டும்... 17 மணந்த 71. இது இங்கு அல்ல... அமெரிக்காவில். காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா...


அமெரிக்காவில் பெற்ற மகனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கச் சென்ற 71 வயது பாட்டி அங்கே தான் சந்தித்த 17 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்டதுதான் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது. காலம் கலிகாலம் என்பது சரியாகத்தான் உள்ளது.


அமெரிக்காவின் டெனெசி மாகாணத்தை சேர்ந்தவர் அல்மெடா எரெல். இவருக்கு ஜஸ்ட் 71 வயசுதாங்க. இவரோட 45 வயது மகன் நெஞ்சுவலியால் இறந்துட்டார். மகனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கிட்ட அல்மெடா...வுக்கு பார்த்ததும் காதல் வந்தது. யார் மீது தெரியுங்களா கேரி ஹார்ட்விக் என்ற 17 வயது சிறுவன் மீது.


தனிமரமாக வாழ்ந்து வந்த அல்மெடாவுக்கு கேரியை பிடிக்க, கேரி அதுக்கும் மேல் வயதான பெண்களை காதலிப்பதில் அலாதி பிரியம் கொண்டவனாம். தன் எட்டு வயது முதல், பல பெண்களை காதலித்து கைவிட்ட அவன், 77 வயது பாட்டியை கடைசியாக காதலிக்க அந்த காதலும் கசப்பாகி வெறுப்பாகி இருந்த நிலையில்தான் அல்மெடா வந்து சேர்ந்துள்ளார்.


இதையடுத்து 2 பேரும் கடந்த ஆண்டு அக்டோபரில் திருமணம் செஞ்சுக்கிட்டாங்களாம். இப்போது இந்த தகவல் வெளியில் வந்து பரபரப்பை கிளப்பி உள்ளது. இதை விட பெரிய கொடுமை என்னன்னா? அல்மெடாவை திருமணம் செய்ய, கேரியின் 48 வயது தாயும், 71 வயது பாட்டியும் ஆசி வழங்கியதுதான். என்ன கொடுமைங்க இது.


Find Out More:

Related Articles: