சென்னை:
இயற்கை என்ன செய்யும்... எப்போது செய்யும் யாரும் அறிந்து கொள்ள முடியாத அதிசயங்களில் மிக முக்கியமான ஒன்று.
இயற்கை அள்ளியும் கொடுக்கும்... அள்ளிக் கொண்டும் செல்லும் என்பதை பூகம்பம் வாயிலாகவும், சுனாமி வாயிலாகவும் தெரிந்து கொண்டோம். இதெல்லாம் விட கொடுமை ஒன்று நடந்துள்ளதை தெரிந்து கொள்வோமா...
1737-ம் ஆண்டில் வங்காளமே நடுநடுங்கியது. ஆமாங்க மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சரிந்து விழும் கட்டடங்கள்... மக்களின் அவலக்குரல் என்று எங்கும் ஒரே அழுகை சத்தம்தான். இந்த பெரிய நிலநடுக்கம் அள்ளிச் சென்ற மனித உயிர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுங்களா.... 3 லட்சம்... உண்மைதான்... இந்த பெரிய நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சம். அறிந்து கொண்டதில் இது நான்கு.