சென்னை:
ஆக்சிஜன் இருந்தால்தான் நாம் சுவாசிக்க முடியும்... அட நாம் உயிரே வாழ முடியும். சரிங்க... நாம என்ன பில்டரா... காற்றில் இருந்து எப்படி கரெக்டா ஆக்சிஜனை மட்டும் சுவாசிக்கிறோம்... தெரியுமா? தெரியுமா?
தெரிஞ்சுக்குவோமா... நாம் சுவாசிக்கும் போது கரெக்டா ஆக்சிஜனை மட்டும் சுவாசிப்பதில்லை. எல்லா வாயுக்களும் கலந்த கலவை காற்றுதான் நுரையீரலுக்கு செல்கிறது. இப்படி போகும் காற்றுக்கலவை நுரையீரலில் நுழையும் போது "ஆல்வியோலி" என்ற மூச்சு சிற்றறைகளுக்குள் போகும்.
அந்த நுண்ணறைகளின் உட்சுவரில் சிறு சிறு ரத்த நுண் குழாய்கள் ஆக்சிஜனை மட்டும் ரத்ததில் கலக்க செய்யும். ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின்கள் ஆக்சிஜன்களை காந்தம் போல் கவர்ந்து இழுத்து கொள்கின்றன. ரத்தத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடு நுரையீரலுக்கு வந்து விடும். இப்படித்தான் காற்றில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நுரையீரல்கள் பிரித்தெடுத்து ரத்தத்தில் கலக்க செய்கிறது. அப்போ... நம்ம உடம்புல எம்புட்டு வேலை நடக்கிறது பாருங்க... இது அறிந்து கொண்டதில் நான்கு.