தாயின் தாலாட்டுக்கு கருவறையில் கை தட்டிய குழந்தை...

Sekar Tamil
பிரிட்டன்:
வெளியில் பாடிய தாலாட்டுக்கு கருவறையில் இருந்த குழந்தை கைதட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.


பிரிட்டனைச் சேர்ந்தவர் ஜென் கார்டியனல். கர்ப்பிணி பெண். இவர்  குழந்தையை தாலாட்டி மழலையர் பாடல் ஒன்றை பாடினார். அப்போது அப்பாடலை கேட்டு கருவறையில் உள்ள குழந்தை கை தட்டும் காட்சிகள் கண்ட டாக்டர்கள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் காட்சிகள் மூலம் படம் பிடித்தனர். இது டாக்டர்களுக்கே ஆச்சரியத்தை அளித்துள்ளது.


இந்த காட்சிகளை ஜென் கார்டியனல்லின் கணவர் வீடியோகவும் பதிவு செய்தார்.  இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிசயங்களில் இதுவும் ஒரு அதிசயம்தானே!


இதுகுறித்து தாய் ஜென் கார்டியனல் கூறுகையில், எனது குழந்தை மூன்று முறை கை தட்டியது. குழந்தை கைத்தட்டும் 15 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவை யூ டியூப்பில் ஒரே நாளில் மட்டும் 48,000 பேர் பார்த்து ரசித்துள்ளனர் என்றால் பார்த்து கொள்ளுங்க...


Find Out More:

Related Articles: