சதுப்பு நில காடுகள் அழிப்பு... கபில் சர்மா அலுவலகத்தில் ஆய்வு

Sekar Tamil
மும்பை:


சதுப்பு நில காடுகள் அழிப்பு விவகாரத்தில் நடிகர் கபில் சர்மா அலுவலகத்தில் வனத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தியது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தி நகைச்சுவை நடிகரும், டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆன கபில் சர்மா, மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் சட்டவிரோதமாக கட்டடம் கட்டியதாக ஒரு சர்ச்சை எழுந்தது.


அதுமட்டுமா... இவர் சதுப்பு நிலக்காடுகளை அழித்து ஆக்கிரமிப்பும் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தன்னை சந்தித்து ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக டுவிட்டரில் கபில் சர்மா பற்ற வைக்க...இந்த விவகாரத்தில் பெரும் பரபரப்பு உருவானது.


சிவசேனா, மராட்டிய நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகள் கபில் சர்மாவுக்கு எதிராக போர்க்கொடி பிடிக்க பரபரப்பு பற்ற வைத்த தீபோல் உருவானது. இந்த சூழ்நிலையில் வெர்சோவாவில் உள்ள கபில்சர்மாவின் அலுவலக வளாகம் மற்றும் சுற்றுப்பகுதிகளை வனத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர்.


இதுகுறித்து உதவி வன பாதுகாவலர் மாக்ரந்த் கோத்கே நிருபர்களிடம் கூறுகையில், இப்பகுதியில் கபில் சர்மா மட்டுமின்றி 50 முதல் 60 பிளாட் உரிமையாளர்களும் விதிமுறைகளை மீறி உள்ளனர்.


இங்குள்ள குடியிருப்பு மக்கள் அனைவரும் சதுப்பு நிலக்காடுகளை அழித்து கட்டிடங்களை எழுப்பி உள்ளனர். இதுகுறித்து அறிக்கை தயாரித்து கலெக்டரிடம் தாக்கல் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.


Find Out More:

Related Articles: