பத்திரமாக மீட்பு... டுவிட்டரில் மத்திய அமைச்சர் தகவல்...

frame பத்திரமாக மீட்பு... டுவிட்டரில் மத்திய அமைச்சர் தகவல்...

Sekar Tamil
புதுடில்லி:


பத்திரமாக மீட்பு... மீட்பு என்று டுவிட்டரில் செய்தியை தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர். என்ன விஷயம் தெரியுங்களா?


லிபியாவில் கடத்தப்பட்ட 2 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்பதுதான் விஷயம். கடந்த ஆண்டு ஜீலை மாதம் ஆந்திராவை சேர்ந்த டி.கோபாலகிருஷ்ணன், தெலுங்கானாவை சேர்ந்த பல்ராமகிருஷ்ணன் ஆகியோர், லிபியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். பெரும் பரபரப்புக்கு உள்ளான இந்த கடத்தல் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


கடத்தப்பட்ட அவர்களின் நிலை குறித்து எவ்வித தகவலும் தெரியாத நிலையே நீடித்து வந்தது. இதையடுத்து இருவரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.


இந்நிலையில், இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் இனிப்பான செய்தியாக தெரிவித்துள்ளார். இந்த விபரம் கடத்தப்பட்ட 2 பேரின் குடும்பத்தினருக்கும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.



Find Out More:

Related Articles:

Unable to Load More