போஸ்டரிலேயே கலக்கிய "எனக்கு வாய்த்த அடிமைகள்"

Sekar Chandra
சென்னை:
சிக்கினான்டா ஒரு அடிமைங்கிறது வடிவேலு காலம்... இப்போ... எனக்கு வாய்த்த அடிமைகள் என்பதுதான் இந்தகாலம். அட படம் பேருப்பா இது.


ஜெய் , பிரணீதா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ” எனக்கு வாய்த்த அடிமைகள்”. தலைப்பு மட்டும் வித்தியாசமா வைச்சிருக்காங்களேன்னு நினைக்கக் கூடாது. படத்தைபோலவே இதன் போஸ்டரையும் வித்தியாசமா டிசைன் செய்திருக்காங்கப்பா...


இப்படத்தை மகேந்திர ராஜாமணி இயக்கியுள்ளார். படத்தின் தலைப்பை போலவே போஸ்டரும் செம டிபெரண்ட் காட்டி இருக்காங்க. எப்படி தெரியுங்களா. மொபைல் போனில் வாட்ஸ் ஆப் குரூபில் உள்ளது போன்று வடிவமைத்து உள்ளனர். தயாரிப்பாளர் குரூப் அட்மின் போன்றும் மற்றவர்கள் உறுப்பினர்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. படமும் அதுபோலவே வித்தியாசமா இருந்தா சரிதான். 



Find Out More:

Related Articles: