கபாலியின் பட பாடலால் பறந்த விமானம் தரையிறங்கிய கூத்து

Sekar Chandra
சென்னை:
பேரை கேட்டாலே அதிருதுல்ல... என்பது பஞ்ச்... கபாலி பாட்டினால் பறந்த விமானம் தரையிறங்கிய அசாத்திய சுவாரஸ்ய சம்பவம்தான் இது. 


சென்னையிலிருந்து துபாய் சென்ற விமானம், கபாலி திரைப்படத்தில் வரும் ‘நெருப்புடா’ பாடலால் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதுதான் இதுகுறித்து தகவல்கள் வெளியாகி வருகிறது.


 
கடந்த 14-ம் தேதி செவ்வாய் கிழமை இரவு 7.00 மணிக்கு, சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா இந்தியாவின் விமானம் ஒன்று துபாய் புறப்பட்டு சென்றுள்ளது.


 
விமான நேர அட்டவணைப்படி விமானம் இரவு 10.00 மணிக்கு துபாய் மணிக்கு சென்றடைய வேண்டும். ஆனால், துபாய் கிளம்பிய சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் மீண்டும் சென்னையிலேயே அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது.


 
காரணம் குறித்து விளக்கம் அளித்த விசாரணை அதிகாரி, ஒருவர் கூறியதுதான் அதிர வைக்கும் காமெடியாக இருந்துள்ளது. “விமானத்தில் நெருப்புக்கான சமிக்ஞையோ, புகையோ வெளியாகவில்லை. ஆனால்ப யணிகளில் ஒருவர் ‘நெருப்பு, நெருப்பு’ என தமிழில் கத்தியதால், அதிர்ச்சியடைந்த விமான பணிப்பெண் விமான நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க விமானம் தரையிறக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார்.


 
பின்னர் அவர் கூறியதுதான் காமெடியோ... காமெடி... "சென்னையை சேர்ந்த 30 வயதுடைய என்ஜினியர் ஒருவர், கபாலி திரைபடத்தில் வரும் ’நெருப்புடா’ பாடலை பாடியுள்ளார். அவர் காதில் ஹெட்போனை அணிந்துகொண்டு  உச்சக்குரலில் பாடியுள்ளார். ஒருசில தமிழ் வார்த்தைகள் மட்டுமே தெரிந்த அந்த பணிப்பெண் ‘நெருப்பு’ என்ற வார்த்தையை கேட்டதும் பைலட்டுக்கு தகவல் கொடுக்கவே விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது” என்றாரே பார்க்கலாம்... அப்ப வானம் வரை அதிருது கபாலியின் பாடலை கேட்டு...


Find Out More:

Related Articles: