"கபாலி"க்கு பிறகு களம் இறங்கும் "முடிஞ்சா இவன புடி"

frame "கபாலி"க்கு பிறகு களம் இறங்கும் "முடிஞ்சா இவன புடி"

Sekar Chandra
சென்னை:
கன்னடத்துகாரராக இருந்தாலும் நடிகர் சுதீப்பிற்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர் இருக்கிறார்கள். இதுவரை நேரடி தமிழ்படத்தில் நடிக்காத இவரு இப்ப நடிக்கிறார். 


நம்ம நாட்டாமை இயக்குனர்தான் இவரை இயக்குறார். படம் பேரு என்ன தெரியுங்களா? முடிஞ்சா இவன புடி எப்படி இருக்கு தலைப்பு. இயக்குனரோட வேகம் தான் எல்லாருக்கும் தெரியுமே... கிடுகிடுவென படம் வளர்ந்துடுச்சு. இப்ப இறுதிக்கட்ட வேலையில் இருக்காங்க. தமிழ், கன்னடம் 2 மொழிகளிலும் இந்த படம் ரெடியாகுதாம்.


நம்ம "கபாலி" ரிலீஸ் ஆனப்பிறகுதான் இந்த படம் திரைக்கு வருதாம். சுதீப் நன்கு தமிழ் பேசுவார் என்பது தெரியும். இந்த படத்திற்காக பக்கா தமிழன் போலவே தன்னை மாற்றிக் கொண்டாராம். இதை விட இன்னும் ஒரு "மேட்டரு" இருக்கு. இதுல ஒரு குத்தாட்டம் போட இருக்கிறது யாரு தெரியுங்களா... சன்னி லியோன் என்று கோடம்பாக்கத்திலிருந்து தகவல் வந்து இருக்கு... உண்மைங்களா? நாட்டாமையே...



Find Out More:

Related Articles:

Unable to Load More