கிடைக்கலைன்னு புலம்பறது நம்மாளுங்க வழக்கம் சத்தமில்லாம வந்து கோடிகளை அள்ளுறது ஹாலிவுட் பழக்கம்

Sekar Chandra
சென்னை:
நம்மாளுங்க... தியேட்டர் கிடைக்கலை...கிடைக்கலைன்னு புலம்பி தள்ளும் நேரத்தில் சத்தமில்லாம வந்து கோடிக்கோடியா அள்ளுது ஹாலிவுட் படங்கள்.. இது வர்ற வெள்ளிக்கிழமையும் நடக்க இருக்கு.


நம்ம கோலிவுட்டில் படம் தயாரிச்சு அதை வெளியிட தியேட்டரே கிடைக்கலைன்னு புலம்பி தள்ளுபவர்கள் ஒரு விஷயத்தை மறந்தே விடுகின்றனர். அது என்ன தெரியுங்களா? படம் நல்லா இருந்தா நம்மாளுங்க சின்ன பட்ஜெட்டோ... பெரிய பட்ஜெட்டோ... அதெல்லாம் பார்க்க மாட்டாங்க... கொண்டாடித் தீர்த்துடுவாங்க. இதை தமிழ் உலகம் இன்னும் பார்த்துக் கொண்டுதான் இருக்கு. 


இதுக்கு இடையில ஹாலிவுட் படங்களை வாங்கி டப்பிங் செஞ்சு வெளியிடறவங்க கோடிக்கணக்கில் கல்லா கட்டுறதும் இங்கதானே. உதாரணத்துக்கு சில வாரத்துக்கு முன்னாடி வந்த ஜங்கிள் புக்கை சொல்லலாம். அதுக்கு பிறகு வந்த பேய் படம் கான்ஜீரிங்-2வும் கோடிக்கணக்கில் வசூலை அள்ளுது.


இப்ப வர்ற வெள்ளிக்கிழமை 200 தியேட்டர்களில் வெளியிட உள்ள இன்டிபெண்டஸ்-2வும் இந்த லிஸ்ட்டுல சேரும் என்று தெரிய வந்துள்ளது. என்னம்மோ போங்கப்பா... அவங்க விண்வெளி, காடுன்னு படம் எடுத்து கோடியில அள்ளுறாங்க... நாம..?


Find Out More:

Related Articles: