ஜெயிக்கிறதை விட ஜெயிச்சதை காப்பாத்தறது ரொம்ப முக்கியம்

frame ஜெயிக்கிறதை விட ஜெயிச்சதை காப்பாத்தறது ரொம்ப முக்கியம்

Sekar Chandra
சென்னை:
ஜாக்கிரதை... கவனம் வேணும்னு யோசிச்சு யோசிச்சு அடி எடுத்து வைக்கிறாராம் இந்த வெற்றி நாயகன்.


அண்ணனின் சொந்த கதையில் "தனி ஆளாக" நின்னு ஜெயிச்ச இந்த ஜெயமானவர் அந்த படம் கொடுத்த பிரமாண்ட வெற்றியை தக்க வைச்சுக்க தலைகீழா நின்னு தண்ணீர் குடிக்க சொன்னாலும் செய்வார் போல. அந்த படத்தோட அதிரிபுதிரி வெற்றி போல இல்லன்னாலும் அந்த உலகம் படமும், மிருக படமும் அவருக்கு பெரிய அளவில் பேரை கொடுக்கலை. இருக்கிற பேரையும் கெடுக்கலை. இருந்தாலும் ஹீரோ இப்ப நடிச்சிக்கிட்டு இருக்கிற "கன்" படத்தை ரொம்ப நம்பி இருக்காராம். 


அதனால நடை உடை பாவனைன்னு எல்லாத்திலேயேயும் மாற்றம் கொண்டு வந்து அண்ணன் படம் கொடுத்த வெற்றியை மீண்டும் சுவைக்க முயற்சிக்கிறாராம்.


Find Out More:

Related Articles:

Unable to Load More