சென்னை:
தனி ஹீரோவா நடிச்சாலும் கிடைக்காத பேரையும், புகழையும் பாபி சிம்ஹாவிற்கு இறைவி படம் அள்ளி அள்ளி கொடுத்து இருக்கு.
தனி ஆளா நின்னு படம் முழுவதும் வந்தாலும் பேரு கிடைக்க மாட்டேங்குது. 2 பேருல ஒருத்தர், 3 பேருல ஒருத்தர்ன்னு வந்தா செம புகழ் கிடைக்குதேன்னு யோசிச்சவருக்கு ஒன்று பிடிப்பட்டு இருக்கு.
தனியா நடிச்சாலும் சரி, கூட்டமா நடிச்சாலும் சரி... கதையும், திரைக்கதையும் சரியில்லைன்னா... கப்பல் தண்ணீரு ஓடாது... தரையிலதான் முட்டிக்கிட்டு நிற்கும்னு புரிஞ்சுக்கிட்டார். அதனால இப்போ கதை கேட்கிறதுல்ல அவரு ரொம்ப உஷாராகிட்டார். இப்ப இவரு நடிச்சு வெளிவரப்போற மெட்ரோ படத்தில் செம வெயிட் பாத்திரமாம்.
பிள்ளைகளின் சந்தோஷத்தை நிறைவேத்தி வைக்கிறது பெற்றோர் கடமை. ஆனா அவர்களின் பேராசைக்கு துணை போகக்கூடாது என்ற மைய கருத்து உள்ள படமாம். அதான் கதை கேட்டவுடனேயே ஓகே சொல்லி படமும் இப்ப ரெடியாசிடுச்சாம். இந்த படத்துல ஹீரோ வேற ஆளுங்கிறது முக்கியமான விஷயம்.