கொளஞ்சி டீசரை நாளை சிம்பு வெளியிடுகிறார்

Sekar Chandra
சென்னை:
பிளாக் காமெடியில் செம ஹிட் அடித்த படம் ‘மூடர்கூடம்’. இதன் இயக்குனர்ந வீன் இயக்கத்தில் ரெடியாகியுள்ள ‘கொளஞ்சி’ படத்தின் டீசரை சிம்பு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


சமுத்திரகனி, சங்கவி நடிப்பில் நவீன் இயக்கியுள்ள படம்தான்  ‘கொளஞ்சி’. உண்மை கதையை தழுவலாக கொண்டு இந்த படத்தை நவீன் இயக்கி உள்ளாராம். 


படப்பிடிப்பு முடிஞ்சு கடைசி கடைசியாக "டச்" அதாங்க இறுதி கட்ட வேலைகள் நடந்து வருது. இந்த படத்தோட மோஷன் போஸ்டருக்கு செம வரவேற்பு. சூட்டோடு சூட்டாக பர்ஸ்ட் லுக் டீசரை வெளியிட முடிவு செஞ்சிருக்காங்க... நாளைக்கு நடிகர் சிம்பு டீசரை வெளியட போறார்ன்னு தகவல் வந்திருக்கு. இதை நவீனும் உறுதிப்படுத்தி இருக்கார்.


Find Out More:

Related Articles: