இயக்குனரின் விட்ட டோஸ்... ஏசியுலும் வியர்த்த வெளிநாட்டு நடிகை

Sekar Chandra
சென்னை;
வாய்க்கு பிளாஸ்திரி போட்டுக்க... பார்ட்டிக்கு போறேன் பேர்வழின்னு படத்தை பற்றி எதாச்சு உளறினே என்று சுட்டு விரலை காட்டி பிரமாண்ட இயக்குனர் மிரட்டின மிரட்டல்ல ஏசியிலும் வெளிநாட்டு நடிகைக்கு வேர்த்து கொட்டிடுச்சாம்.


உச்ச நடிகருக்கு இந்த வெளிநாட்டு நடிகையை புக் செய்துட்டு டைரக்டர் படுறபாடு கொஞ்சம் நஞ்சம் இல்லியாம். நடிகை பார்ட்டின்னா முதல் ஆளா நிற்கிற ரகம். செமத்தியா மிதந்து படம் பற்றி உளறி கொட்டி வைக்குமாம் பொண்ணு. அப்படிதான் ஸ்டில்சும், தகவலும் வெளிவந்து இருக்கு.


இதனால் செம டென்ஷனில் இருந்த இயக்கம் கூப்பிட்டு வைச்சு லெப்ட் ரைட் வாங்கிவிட பொண்ணு இப்ப ஏகத்தும் விரதம் கடைப்பிடிக்குதாம். பார்ட்டியா அப்படின்னா... எனக்கு எங்க பாட்டியை மட்டும்தான் தெரியும்னு ஜர்க் அடிக்குதாம். டோஸ் அப்படி விழுந்து இருக்கு. வாய்க்கு போடு பிளாஸ்திரின்னு பொண்ணு இப்ப சாப்பிடறதுக்கு மட்டும்தான் வாயை திறக்குதாம்.


Find Out More:

Related Articles: