சென்னை:
"கபாலி" ராசி தன்ஷிகாவுக்கு "ராணி" அந்தஸ்த்தை கொடுத்துள்ளது. புரியலையாங்க!
கபாலி படத்தில் நடித்து முடித்துள்ளார் தன்ஷிகா. இவரோட செம ஈடுபாடான நடிப்பு, ரஜினியின் பாராட்டு என்று அடுத்தடுத்த செய்திகளால் இப்போ தன்ஷிகாவின் கால்ஷீட் டைரி நிரம்பி வருகிறது. இப்போ புதிய இயக்குனர் பாணியின் இயக்கத்தில் ராணி ஆகியிருக்கிறார் தன்ஷிகா.
படத்திற்கு இசைஞானி இசை. இந்த படத்தோட இயக்குனர் பாணி நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றி புரிந்தவர் என்பது முக்கியமாக குறிப்பிட வேண்டியது. பெரிய கூட்டணியுடன் இணைந்த மகிழ்ச்சியில் உள்ளார் தன்ஷிகா. இது ஹீரோயினுக்கு செம வெயிட் கேரக்டர் படம் என்று கோடம்பாக்கத்து கோபாலு சொல்லியிருக்காரு.
இந்தப் படத்தின் பூஜை திருவண்ணாமலையில் நடக்க, படத்தோட பெரும் பகுதி ஷீட்டிங் மலேசியாவில் நடக்கிறதாம்.