கெத்து காட்டிய குத்துநாயகி ராகவா ஜோடியானார்

Sekar Chandra
சென்னை:
இறுதிச்சுற்றில் செம கெத்து காட்டிய நடிகை ரித்திகா சிங் தற்போது அடுத்த படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். என்ன படம் தெரியுங்களா?


கன்னடத்தில் நம்ம டைரக்டர் வாசு எடுத்த ஷிவலிங்கா செமத்தியான வசூலை அள்ளியது. அதிரிபுதிரி வெற்றி என்பதால் டைரக்டர் வாசுவுக்கு ஏகப்பட்ட வாண்டட். ஆனா அவரு அந்த படத்தை தமிழில் சூப்பர்ஸ்டாரை வைச்சு இயக்க நினைச்சாரு. அது முடியாத காரியமா போனதால் இதுல கமிட் ஆகி இருக்கிறது ராகவா லாரன்ஸ். இவரு ஜோடி தேடிக்கிட்டே இருந்த படக்குழு இப்போ ஒருத்தரை இறுதி செஞ்சு இருக்கு. அவரு யாருன்னா... இறுதிச்சுற்றில் செம கெத்து காட்டிய நடிகை ரித்திகா சிங்தான்.


இப்ப பொண்ணு செம ஹேப்பியாம் அண்ணாச்சி. தொடர்ந்து படங்கள் கிடைப்பதால் செம ஹேப்பியாம் அண்ணாச்சி.


Find Out More:

Related Articles: