கபாலிக்கு அப்புறம் வர்றார்... ரெமோ... செப்.2ல் ரிலீசாம்...

Sekar Chandra
சென்னை:
"கபாலி" படத்திற்கு செம எதிர்பார்ப்பில் இருக்கிற நிலையில் தன் 2 மாதம் கழிச்சு வரட்டும்னு "ரெமோ" நினைக்கிறாராம். ஏன்னா ஏகப்பட்ட பொருட்செலவில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கபாலிக்கு முன்னாடி படம் பப்படம் ஆகி விடக்கூடாது இல்லியா அதுக்காகத்தான்.


தலைவரு பேரை டைட்டிலா வச்சு இவரு இதுக்கு முன்னாடி நடிச்ச  படத்துல "ரெமோ"வுக்கு நல்ல பேரு. கலெக்சனும் செமத்தியா இருந்துச்சு. அந்த பட ஜோடியே இப்பவும் ஜோடி சேர்ந்திருக்கு. இந்த நிலையில 2 நாளைக்கு முன்னாடி படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டாங்க.


இப்ப தலைவரு படம் "கபாலி" ரிலீஸ் தள்ளி போகுது. அதனால தன்னோட ரெமோவை செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைச்சுருக்காராம் ஹீரோ. 


கபாலி முன்னாடி நிக்க முடியாதுன்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்கார் ரெமோ. இப்படம் வரும் செப்டம்பர் 2-ம் தேதி திரைக்கு வரும் எனவும் சொல்லப்படுகிறது.


Find Out More:

Related Articles: