"ரெமோ நர்ஸ்சு"க்கு போட்டியா "சிகையில்" கதிர் பெண் வேடம்

Sekar Chandra
சென்னை:
போட்டியா... போட்டியா... வாப்பா பார்ததுக்கலாம்னு சிவகார்த்திகேயன் ரெடியாகி இருக்கிறார். என்ன விஷயம் தெரியுமா?


மதயானை கூட்டம், கிருமி புகழ் கதிர் நடித்திருக்கும் புதிய படம் சிகை. ஜெகதீசன் சுபு இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. சரி இதுல என்ன பெரிய பிரச்னை என்று கேட்கிறீர்களா? சிவகார்த்திகேயனுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இனிதாங்க மேட்டரே!


இப்படத்தில் ஹீரோ கதிர், பெண் வேடத்தில் நடித்துள்ளார் என்று தற்போது தகவல்கள் கசிந்துள்ளது. சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் அவர் நர்ஸ் வேடத்தில் நடிப்பது ஹைலைட். இந்த படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டரே செம வரவேற்பை பெற்றுள்ளது. இப்போ கதிரும் இப்படி ஒரு வேடத்தில் நடிப்பதால் போட்டி உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.



Find Out More:

Related Articles: