வடசென்னை படம் குறித்த முக்கிய தகவல்

Sekar Chandra
சென்னை:
"செய்வதை திருந்த செய்" என்பதுதான் தனுசிற்கு இப்போ பிடித்தமான ஒன்றாக மாறி உள்ளதாம். காரணம் தன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து கொண்டே இருப்பதால்தான்.


தற்போது இவர் நடிக்கும் வெற்றிமாறனின் கனவுப்படமான "வடசென்னை" படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்ப பூஜையுடன் நடந்தது. 


லைக்கா நிறுவனம் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்குது. இதுல தனுசுக்கு சமந்தா ஜோடியாகி இருக்கிறார். இந்த படத்துல  தனுஷ் கேரம்போர்டு விளையாடுவது போன்ற காட்சிகள் இருக்காம். அப்ப கேரம் போட்டிகளை அஸ்திவாரமாக்கி படம் நடக்கிறதான்னு கேட்காதீங்க...கதை பற்றி கொஞ்சம் கூட கசிய விடாமல் ரககசியம் காத்து வருகிறது படக்குழு.


இருங்க... இருங்க... இதுக்கும் செய்வதை திருந்த செய் என்பதற்கு என்ன தொடர்பு என்கிறீர்களா? இருக்கே... இந்த காட்சிக்காக தனுஷ் கேரம் விளையாடி பயிற்சி செய்து வருகிறாராம். இதற்காக கேரம் வீரர் ஒரு அவருக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். இது எப்படி இருக்கு? உழைச்சா... உழைப்புக்கு என்றும் மரியாதை கிடைக்கும் என்பது உண்மைதானே!



Find Out More:

Related Articles: