வர்றாரு... வர்றாரு... "தல" ஹாலிவிட் ஸ்டைலுல வர்றாரு....

Sekar Chandra
சென்னை:
தல அடுத்த படத்துல என்னவா வரபோறார்... வரபோறார்.  அவரோட ரசிகர்களின் ஆர்வக்குரல் விட்டா ஐ.நா. சபை வரைக்கும் எதிரொலிக்கும் போல. இதோ இப்ப தகவல் கிடைச்சிடுச்சே...


சிறுத்தை சிவா டைரக்சனில் "தல" எப்பிஐ ஆபீசரா நடிக்க இருக்காராம்... இருக்காராம். இந்த கெட்டப் ஹாலிவுட் ஸ்டைலில் இருக்குமாம். வீரம்,  வேதாளம் என்று மாறுபட்ட கேரக்டர்களில் நடித்த "தல"யின் 57வது படத்தையும் சிறுத்தை சிவாதான் இயக்க உள்ளார்.


மற்ற 2 படங்களை விட இந்த படம் இன்னும் ஹிட் அடிக்கணும்னு டைரக்டர் கதையை செதுக்கி வருகிறாராம். இதுலதான் "தல" கெட்டப் எப்பிஐ ஆபீசராம். செம கலரு, செம ஸ்டைலுன்னு கலக்குற "தல"க்கு சொல்லவா வேணும். இதுல ஹாலிவுட் லுக் கொண்டு வரப்போறாங்களாம். 


இந்த படத்துல அனுஷ்கா ஜோடியா நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இன்னும் இது உறுதி செய்யப்படவில்லை. முழுப்படமும் வெளிநாட்டிலேயே எடுக்க திட்டம் போட்டு இருக்காங்களாம். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாவோ இல்ல கோடை விடுமுறையிலேயோ வெளியாகும்ன்னு சொல்றாங்க... சொல்றாங்க..


Find Out More:

Related Articles: