தவித்து போன வில்லன் நடிகர்... உதவி செய்த இந்திய தூதரகம்

frame தவித்து போன வில்லன் நடிகர்... உதவி செய்த இந்திய தூதரகம்

Sekar Chandra
சென்னை:
தமிழ், தெலுங்கு, இந்தின்னு மும்மொழிகளிலும் வில்லனா நடிச்சு கலக்கியவர் சோனுசூட்... இவருக்கே முகம் தெரியாத ஆளு வில்லன் ஆகிட்டாருப்பா.


சோனுசூட் தன்னோட மனைவி சோனாலியுடன் ஸ்பெயின் நாட்டில நடக்கும் ஒரு திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு புறப்பட்டு போனாருங்க. சந்தோஷமா போன ஆளுக்கு "திக்"குன்னு ஒரு சம்பவம் நடந்து இருக்கு. வில்லனுக்கே "திக்கா" என்று கேட்கக்கூடாது. பல படங்களில் ஹீரோக்களை அலற விட்ட இவரை யாரோ முகம் தெரியாத ஆளு அலறவிட்டார் பாருங்க... அதான் வேதனையே.


ஸ்பெயின் நாட்டு  விமான நிலையத்தில் போய் இறங்கியதும்தான் தெரிய வந்து இருக்கு சோனு சூட் மனைவியின் கைப்பையை யாரோ அபேஸ் செய்தது. அவ்வளவுதான் 2 பேருக்கும் முகம் இருண்டு போய்விட்டதாம். அந்த பையிலதானே பாஸ்போர்ட், பணம் என முக்கிய ஆவணங்கள் இருந்திருக்கு. 


வில்லன் நடிகர் தவித்து போக அவரோட துயரை அங்குள்ள நம்ம  தூதரகம் நிவர்த்தி செய்து இருக்கு. தற்காலிக பாஸ்போர்ட் உள்ளிட்ட உதவிகள் செய்ய பெரிய கண்டத்தில் இருந்து தப்பிய அந்த தம்பதி பெருமூச்சு விட்டுள்ளனர். 



Find Out More:

Related Articles:

Unable to Load More