இந்தியில் திறமை காட்ட உள்ள நதியா... அழகான அம்மா

frame இந்தியில் திறமை காட்ட உள்ள நதியா... அழகான அம்மா

Sekar Chandra
சென்னை:
தமிழ், தெலுங்கில் தன் நடிப்பாற்றலை காட்டிய "என்றும் இளமை" அம்மா நடிகை நதியாவிற்கு தற்போது இந்தியுலகமும் இருகரம் கூப்பி வரவேற்பு தெரிவித்துள்ளதாம்.


கதாநாயகியாக நடித்தபோதே அனைவரின் உள்ளங்களிலும் உள்ளே புகுந்தவர் நதியா. இவர் பெயரை வைத்தே பல வியாபாரிகள் கல்லா கட்டினர். நதியா பொட்டு, தோடு, வளையல், செருப்புன்னு விற்ற காலம் யாராலும் மறக்க முடியாத ஒன்று. திருமணம் முடிந்த பின்னர் குடும்ப வாழ்க்கைக்கு மாறியவர் ஜெயம் ரவி படத்தில் அழகிய அம்மாவா மீண்டும்  அதே இளமையுடன் வந்து சக்ஸஸ் கொடுத்தார்.


பின்னர் தன் வயசுக்கு ஏற்ற கேரக்டர்களில் கலக்கியவர் தெலுங்கையும் ஒரு கை பார்த்தார். இதுவரை இந்தி சினிமா பக்கம் எட்டிக்கூட பார்க்காத அவர் விரைவில் அங்கும் தன் திறமையை காட்ட உள்ளாராம்.


Find Out More:

Related Articles:

Unable to Load More