சென்னை:
"கபாலி"க்கு பிறகு ரஞ்சித் யார் படத்தை இயக்க போகிறார் என்பது குறித்து பல தகவல்கள் உலா வந்தது. இருந்ததாலும் சூர்யாவைதான் இயக்குகிறார் என்று பலர் சொல்லி வந்தனர்.
தற்போது அதை உறுதிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். கபாலி படத்தின் வேலைகளில் ஜரூராக இருக்கும் அவரே தற்போது வாய் திறந்து உள்ளார்.
கபாலி படத்தில் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் ரகசியத்தை போட்டு உடைத்து விட்டார் ரஞ்சித். ஆமாங்க... நான் அடுத்து இயக்க போற படத்துல சூர்யாதான் நடிக்கிறார். இதுவும் ஆக்சன் நிறைந்த படம் தான்னு சொல்லியிருக்கிறார். அப்புறம் என்ன வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிதான்.
இப்போ கபாலி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாகிட்டாராம். மெட்ராஸ் படத்துக்கு அடுத்த படமே சூர்யாவோடுதான் சேர இருந்தாராம். ஆனால் பிரமாண்டமான படம் கபாலி அதை முந்திக்கொண்டு விட்டதாம். இது எப்படி இருக்கு?