இத்தாலியின் பிரபல காமெடி நடிகர் காலமானார்

frame இத்தாலியின் பிரபல காமெடி நடிகர் காலமானார்

Sekar Chandra
ரோம்:
நீச்சல் வீரர், விமானி, அறக்கட்டளை நிர்வாகி என பன்முகம் கொண்ட இத்தாலியின் பிரபல காமெடி நடிகர் பட் ஸ்பென்சர் இன்று காலமானார்.


இவர் தன் இளமைக்காலத்தில் பிரபல நீச்சல் வீரராக திகழ்ந்தவர். பின்னர் தொழில்முறை விமானி. தொடர்ந்து தன் பெயரில் அறக்கட்டளை அமைத்து ஏழை குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி செய்தவர். பின்னர்தான் திரைப்படங்களில் காமெடி நடிகராக மாறினார். 


இத்தாலிய மொழி படங்கள் மட்டுமின்றி பல்வேறு ஹாலிவுட் படங்களிலும் பிரபல காமெடி நடிகராக வெற்றிக்கொடி நாட்டியவர். குறுகிய காலத்தில் பெரிய பெயர் பெற்றவர். ‘பைவ் மேன் ஆர்மி’ என்ற வரலாற்று சிறப்புமிக்க படத்திலும் இவர் நடித்தார். 


இவரது படங்கள் ஐரோப்பிய நாடுகளையும் கடந்து உலகம் முழுவதும் வாழும் மக்களை சிரிக்க வைத்தன என்றே சொல்லலாம்.
இந்நிலையில் பட்ஸ்பென்ஸர் (86) இத்தாலி தலைநகரான ரோமில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார். இது அவரது ரசிகர்களை சோக கடலில் ஆழ்த்தியுள்ளது.


Find Out More:

Related Articles:

Unable to Load More