சென்னை:
நம்புங்க... ரசிகர்களே நீங்களே மறந்து போன விஷயம்தான். என்ன தெரியுங்களா? விஸ்வரூபம்-2.
ஆமாங்க ஆமாம். உண்மைதான் இந்த தீபாவளிக்கு விஸ்வரூபம்-2 ஐ திரைக்கு கொண்டு வந்திடுவாங்களாம்.
முதல் பார்ட் வந்தபவே 2ம் பார்ட்க்கு தேவையான பாதி காட்சிகளை படமாக்கி விட்டாராம் கமல். மீதி இருந்த காட்சிகள் எடுக்க ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் பணத்தட்டுப்பாடு. இதனால்தான் விஸ்வரூபம்-2 தேங்கி நின்று இருக்கு. இப்போ ரவிச்சந்திரனின் நிறுவனம் திவாலாகி தற்போது தமிழ் திரையுலகிலேயே அவர் காணாமல் போனவர்கள் லிஸ்டில் சேர்ந்துவிட்டார். இனியும் அவரை நம்பினால் சரிப்பட்டு வராதுன்னு கமலே களத்தில் குதித்துள்ளாராம்.
சபாஷ் நாயுடு முடிந்ததும் விஸ்வரூபம் 2 படத்தின் பிற காட்சிகளை படமாக்கி தீபாவளிக்கு படத்தை கொண்டுவர கமல் கிடுகிடுவென்று நடவடிக்கை எடுத்துக்கிட்டு இருக்காராம். அப்ப ரெடியா ரசிகர்களே... இந்த வருடம் உங்களுக்கு 2 டிரீட் காத்திருக்கு.