சென்னை:
வட சென்னையில் சமந்தா இல்லியாம். அட அவங்க ஐதராபாத்தில் இருக்காங்கப்பான்னு காமெடி பண்ணக்கூடாது. நாங்க சொல்றது தனுஷ் நடிக்கிற வடசென்னையில் சமந்தா நடிக்கலையாம்.
வடசென்னை படம் கடந்த வாரம் பூஜை போடப்பட்டது. இந்த படம் 3 பார்ட்டா வரப்போகுதுன்னு ஏற்கனவே சொல்லிட்டாங்க. இதுல கதாநாயகி சமந்தாதான்னு எப்பவோ தனுசும் அறிவிக்க.. இதெல்லாம் பழைய மேட்டர். ஆனா இப்ப இந்த படத்துல நடிக்க முடியாது... சாரின்னு சமந்தா சொல்ல தனுசும் ஏற்றுக்கிட்டாங்களாம்.
ஏன் தெரியுங்களா? சமந்தா இப்போ லவ்வுல விழுந்து இருக்கார் சீக்கிரமே திருமணம் நடக்கும்னு தெரியுது. அதனால இப்ப எந்த படமும் கமிட் பண்ணிக்கலை. இதைவிட முக்கியமான விஷயம்... சமந்தா இனி படத்துல நடிக்கிறது அவர் லவ் பண்றவரோட குடும்பத்துக்கு பிடிக்கலையாம். அதனால அவரும் படங்களை ஒத்துக்காம இருக்கார். இந்த நிலையிலதான் வடசென்னை துவங்க... அதுவும் 3 பார்ட் வேற. ஒரு பார்ட்ல மட்டும் சமந்தா நடிச்சு... மற்ற பார்ட்டில் இல்லாட்டி நல்லா இருக்காதுல்ல. அதான் தனுசும் சரின்னு சொல்லிட்டாராம். அப்ப யாருங்க ஹீரோயின்... சீக்கிரமே சொல்வாங்களாம்.