சம்சாரிச்சாங்க... சாதிச்சுட்டாங்க.. தயாரிப்பாளர் தலையில் துண்டு

frame சம்சாரிச்சாங்க... சாதிச்சுட்டாங்க.. தயாரிப்பாளர் தலையில் துண்டு

Sekar Chandra
சென்னை:
நாங்களும் இருக்கோம்னு எதையாவது சொல்லி தங்களை லைம் லைட்டுக்குள் கொண்டு வர கோலிவுட் ஆட்கள் செய்யற தந்திரம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். சமீபத்தில் வெளியான பெண் கடவுள் படத்தை போட்டு தாக்கிய சின்னத்திரை பஞ்சாயத்து அம்மா நடிகையை அந்த தயாரிப்பாளர் வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகிறாராம்.


இந்த பஞ்சாயத்து அம்மா நடிகை இயக்கிய படங்கள் பெரிய அளவில் வெற்றிப் பெறவில்லை. இப்போ இவங்க இயக்கிய படமும் பெட்டிக்குள் லட்சங்களை விழுங்கி முடங்கி கிடக்கு. இதை வெளியிட முடியாம தயாரிப்பாளர் தவியாய் தவிச்சு வர்றார். ஆனா இதை கண்டுக்காம தன்னோட அடுத்த கதையை மருந்து சோப் விற்பனை செய்யற நிறுவனத்துக்கிட்டே சொல்லி ஓகே வாங்கிட்டாராம்.


இதுல என்ன விசேஷம்னா இரண்டு பேருக்கும் மலையாள உலகம். அதுனால மலையாளத்துல சம்சாரிச்சு சாதிச்சுட்டாராம். ஆனால் முந்தைய பட தயாரிப்பாளரோ தோளில் கிடந்த துண்டை எடுத்து தலைக்கு போட்டுக்கிட்டு நடிகை கம் இயக்குனரை வார்த்தைகளால் வறுத்தெடுத்து வர்றாராம். என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா.. ஊருக்கு ஒரு நியாயம்... உங்களுக்கு ஒரு நியாயமா?


Find Out More:

Related Articles:

Unable to Load More