நம்மாளுக்கு நாமளும் கைக் கொடுப்போம்... ஜேகே படம் தெலுங்கில் வெற்றி

frame நம்மாளுக்கு நாமளும் கைக் கொடுப்போம்... ஜேகே படம் தெலுங்கில் வெற்றி

Sekar Chandra
சென்னை:
நல்ல படத்திற்கு என்றும் மவுசுதான் என்பதை சேரன் மீண்டும் நிரூபித்துள்ளார். எப்படி தெரியுங்களா?


சேரனின் இயக்கத்தில் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற தயாரானது. முதன்முதலில் நேரடியாக மக்களிடம் இந்த படத்தை சிடி வாயிலாக சேரன் கொண்டு வந்தார். ஆனால் நம்மாளுங்க எவ்வித ரெஸ்பான்சும் தரவில்லை என்பதுதான் உண்மை.


ஆனால் இந்த படம் சுமார் 250 திரையரங்குகளில் தெலுங்கில் வெளியானது. அங்கு படம் சக்கை போடு போட்டு வருகிறது. 
தெலுங்கு ரசிகர்களிடம் அமோக வெற்றியை கண்ட இப்படம் தற்போது அடுத்த மாதம் தமிழில் தியேட்டர்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. நம்மாளுக்கு நாமளும் கைகொடுப்போம்.


நல்ல திரைப்படம் எப்போதும் வெல்லும் என்பதை சேரனின் படம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஏற்கனவே DVDகளில் வெளியிடப்பட்டிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்கள், இது நல்ல படம், இன்னும் நிறைய பேர் பார்க்க வேண்டும் என்று கூறிவருகின்றனராம்.


Find Out More:

Related Articles:

Unable to Load More