இல்ல... நாங்க அப்படி சொல்லலை... ஐங்கரன் நிறுவனம் மறுப்பு

Sekar Chandra
சென்னை:
இல்ல... நாங்க அப்படி சொல்லவே இல்லை என்று ஜகா அடித்துள்ளது ஐங்கரன் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மறுப்பு பெரிய பரபரப்பை கட்டுப்படுத்தி உள்ளது என்பதுதான் உண்மை.


தல அஜித் படத்தின் வியாபாரம் இப்போது எகிறு எகிறு என்று எகிறுவது எல்லாரும் அறிந்த ஒன்று. ஆனால் ஐங்கரன் நிறுவனம் பெயரில் டுவிட்டர் ஐடியில் தல அஜித் குறித்து வந்த செய்திகள் அவரது ரசிகர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது.


அதாவது "தல"யின் மார்க்கெட் ஓவர்சீஸில் குறைவு என்று அதில் சொல்லப்பட்டு இருந்ததுதான் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. தற்போது அதற்கு ஐங்கரன் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எப்படி தெரியுங்களா? 


இதுபோன்ற எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை. அது எங்களுடைய ஐடி இல்லை என்று. இது உண்மையா என்பது அந்த நிறுவனத்திற்கே வெளிச்சம்.


Find Out More:

Related Articles: