அதுக்கே திரும்பிடுவோமா... இல்ல இதுவே இருக்கட்டுமா... குழப்பத்தில் நடிகை

frame அதுக்கே திரும்பிடுவோமா... இல்ல இதுவே இருக்கட்டுமா... குழப்பத்தில் நடிகை

Sekar Chandra
சென்னை:
மறுபடியும்... அதுக்கே திரும்பிடுவோமா என்று நடிகை யோசித்து வருகிறாராம். எதற்கு தெரியுங்களா?


எந்த நேரத்தில் பெயரை மாற்றினாரோ... கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டமாக கொட்டும் என்று நினைத்தவருக்கு கூரையே பிய்த்து கொண்டு போன கதைதான். யார் தெரியுங்களா... நம்ம லட்சுமி ராய்தான்.


பெயர் மாற்றுவதற்கு முன்பு கூட அவருக்கு தோல்விகள் என்பது அவ்வளவாக இல்லை. எந்த நேரத்தில் ராய் லட்சுமி என்று பெயரை மாற்றிக் கொண்டாரோ அப்போதிருந்து அவருக்கு அடி மேல் அடிதான்.


மங்காத்தாவுக்கு பின்னர் அவர் நடித்த படங்கள் வரிசையாக பிளாப் கொடுக்க... நைசாக இந்தி பக்கம் திறமைக்காட்ட சென்றார். வாம்மா... ராசாத்தின்னு படங்கள் வரிசைக்கட்டும் என்று நினைத்தவர் நினைப்பில் விழுந்தது மண்.


முருகதாஸ் இயக்கும் அகிரா படத்தில் சின்ன வேடம் மட்டுமே. அறிமுகமான இன்னொரு படம் இழுவையாகி கொண்டே போகிறது. 'பேர் மாத்துனதுலேருந்துதானே சோதனை ஆரம்பிச்சுடுச்சே... திரும்ப பழைய பேருக்கே போயிடலாமா' என்று யோசித்துக்கொண்டிருக்கிறாராம்.

அகிரா படப்பிடிப்பில் லக்ஷ்மி ராய் 



Find Out More:

Related Articles: